ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள சில முக்கிய சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.