சேலத்தாம்பட்டி மெயின்ரோடு மீன்வாயன் தெரு முதல் தளவாய்பட்டி கலர்காடு வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிபக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை விரைந்து சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்களா?
-கோவிந்தன், சேலம்.