சென்னை ஆலந்தூர், நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். மெயின் ரோடு சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் மக்கள் பயன்படுத்த தகுதியற்ற சாலையாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், சாலையில் பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே, அந்த சாலைகளில் செல்லும் போது வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.