ராமநாதபுரம் மாவட்டம் யானைக்கல் வீதி தங்க சேர்ம மகால் எதிரே உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகின்றன. மேலும் சிறு, சிறு விபத்துகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே வாகனஓட்டிகளின் நலன் கருதி சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைப்பார்களா?