சாலை சீர்செய்யப்படுமா?
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பல பகுதிகளில் சாலை சீரமைக்கப்பட்டு உள்ளன. திருப்பூர் மாநகர பகுதியான பிச்சாம்பாளையம் பகுதி பி.என்.ரோடு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த வழியாக ஏராளமான மக்கள் சென்று வருகிறார்கள். ஆனால் இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகிறார்கள். விபத்து ஏற்படுவதற்கு முன்பாக சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.
காளி, திருப்பூர்.