சேலம் 4 ரோடு பாலத்தின் கீழ் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலை ேசதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இது பிரதான சாலை என்பதால் தினந்தோறும் விபத்துகள் நடந்த வண்ணமே உள்ளது. மேலும் 4 ரோடும் சந்திக்கும் பகுதியில் சாலையோரம் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருவோர் சறுக்கி விழுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க முன் வர வேண்டும்.
-குமார், சேலம்.