இரும்பாலை அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து பூமிநாயக்கன்பட்டிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணல் கொண்டு பள்ளங்கள் நிரப்பப்பட்டு சரி செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் பெய்த மழையில் மணல் கரைந்து சென்று விட்டது. எனவே நிரந்தர தீர்வாக இந்த பகுதியில் தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆனந்தன், இரும்பாலை.