தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை- சாயர்புரம் சாலையில் பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளியில் இருந்து முருகன்நகர் உமாமகேஸ்வரர் சிவன் கோவில் விலக்கு வரையிலும் புதிய சாலை அமைப்பதற்காக பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டினர். பின்னர் பல மாதங்களாக பணிகளை கிடப்பில் போட்டதால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.