ராமநாதபுரம் நகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பிரசவ வார்டுக்கு செல்லும் பகுதியில் பேவர் பிளாக் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே சேதமடைந்த பேவர் பிளாக் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?