ஆழ்வார்திருநகரியில் இருந்து குலசேகரநத்தம், வாகைக்குளம் செல்லும் வழியில் ஆழ்வார்தோப்பில் சாலையோரம் அரித்து செல்லப்பட்ட நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சாலையோரம் அரிக்கப்பட்ட நிலையில் ஓராண்டாகியும் இன்னும் சீரமைக்கவில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே சாலையோர பள்ளத்தை நிரப்பி சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.