தேனி நகரில் பெரியகுளம் சாலை, அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி போன்ற பகுதிகளில் மாடுகள், ஜல்லிக்கட்டுக்கு வளர்க்கப்படும் காளைகள் சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகளால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.