குண்டும், குழியுமான தார் சாலை

Update: 2024-12-01 14:13 GMT

புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான்ஊரணி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகரில் இருந்து ராஜாபகதூர் வரை அமைக்கப்பட்டுள்ள சாலை தற்போது சிதிலம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்