மதுரை திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. நகர் பகுதியில் உள்ள சாலைகள் பல இடங்களில் சேதமடைந்து உள்ளது. மேலும் சில பகுதிகளில் புதிய தார் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் சாலை முழுவதும் தண்ணீர் அதிகளவில் தேங்கி அப்பகுதி சகதி காடாக காட்சியளிக்கிறது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.