மதுரை மாவட்டம் பரவை-துவரிமான் வைகை ஆற்றுபாலம் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் இணைப்பு சாலையாகும். அதிகளவில் வாகனங்கள் சென்று வரும் இந்த சாலை சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து புதிய தார்ச்சாலை அமைத்து தருவார்களா?