சாலையோரத்தில் ஆபத்தான பள்ளம்

Update: 2024-11-24 15:34 GMT

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகாவில் வேதபுரம் உள்ளது. வேதபுரம்-திருத்துறைப்பூண்டி சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். பள்ளம் இருப்பதால் பொதுமக்கள் சாலையோரத்தில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேதபுரம்-திருத்துறைப்பூண்டி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்