மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருமுல்லைவாசல் வடகால்-எடமணல் இடையே பழுதடைந்த பாலம் இருந்தது. பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டப்பட்டது. அப்பகுதியில் சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை சாலை அமைக்கப்படாமல் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.