சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்
திருப்பூர் பொிச்சிபாளையத்தில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதை அடையாளப்படுத்த அந்த இடத்தில் மரக்கிளையை வெட்டி வைத்துள்ளனர். இந்த பள்ளத்தால் அருகில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பனியன் கம்பெனிகளுக்கு வாகனத்தில் செல்லும் பணியாளர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. சிறிதாக உள்ள பள்ளம் பெரிதாகி அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-கிருஷ்ணன், திருப்பூர்.