உளுந்தூர்பேட்டை நகராட்சி சென்னை மெயின்ரோடு கடைவீதியில் உள்ள சாலை மழையால் பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை இருந்து வருகிறது. எனவே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.