வடலூர் அடுத்த தென்குத்து ஜெயப்பிரியா நகர் 2-வது வீதியில் ஏற்கனவே 3 வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இத்தெருவின் முடிவில் சாலையின் குறுக்கே சிமெண்டு கலவையை கொட்டி சுவர் போன்று மிக உயரமான அளவில் புதிய வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வேகத்தடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?