தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் ஆவுடையானூர் பஞ்சாயத்து வடக்கு லட்சுமிபட்டி- தெற்கு லட்சுமிபட்டி இணைப்பு சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் உள்ள ராட்சத பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு பேவர்பிளாக் சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்ெகாள்ள வேண்டுகிறேன்.