கரூர் மண்மங்கலத்திலிருந்து சேங்கல் மலைக்கு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை பார்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை புதிய தார் சாலையாக மாற்றினர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.