அயக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மன்விளையில் இருந்து குலசேகரம் சந்தைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க கடந்த ஒரு மாதத்திற்கு முன் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டது. ஜல்லிகள் நிரப்பியதுடன் பணிகள் கிடப்பில் போட்ட நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியை மீண்டும் தொடங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ராதாகிருஷ்ணன், குலசேகரம்.