பொன்மனை பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளப்பாறைவிளையில் மங்கலம் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தார் சாலையாக மாற்றப்படாமல் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல வாகனங்களும் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைப்பதுடன், தார்சாலையாக மாற்றியமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனில்குமார், செக்குமூடு.