திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி இந்திராநகர் வராகி அம்மன் கோவில் தெருவில் சாலையின் குறுக்காக செல்லும் சாக்கடை கால்வாயில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை விரைந்து மூட வேண்டும்.