விளாத்திகுளம் அருகே கொல்லம்பரும்பில் இருந்து வேடநத்தம் மற்றும் கீழ செய்த்தலைக்கு செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இச்சாலை பணி நிறைவடைந்தால் வேடநத்தம்-எப்போதும்வென்றான் இடையே விரைவாக செல்ல முடியும். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.