மதுரை நகர் ஜெய்ஹிந்த்புரத்தில். ராமையா தெருவில் இருந்து தென்னகரம் மற்றும் புலிபாண்டியன் தெரு செல்லும் தெரு சாலை மிகவும் சேதமடைந்து மேடு பள்ளமாக உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலையில் கிடக்கும் கற்களால் இருச்சக்கர வாகனங்கள் சேதமடைவதோடு அவ்வப்போது வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.