சாலை வசதி வேண்டும்

Update: 2024-11-17 13:30 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கர் செவல் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் மயானத்துக்கு செல்லும் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. எனவே மயான சாலை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்