குண்டும்,குழியுமான சாலை

Update: 2024-11-17 12:03 GMT

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாக ஆடுதுறை கஞ்சனூரை அடுத்து துகிலி கிராமம் உள்ளது. துகிலியில் இருந்து நரசிங்கம்பேட்டை செல்வதற்கு சாலை உள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து இருக்கிறது. சாலை குண்டும்,குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்