மயிலாடுதுறை மாவட்டம் அக்களூர் ஸ்ரீநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. அப்பகுதியை சேர்ந்தவர்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. பொதுமக்கள் அவ்வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஸ்ரீநகர் பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.