ராசிபுரம் ஆண்டகலூர் கேட்டிலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் தோனமேடு பஸ் நிறுத்தம் உள்ளது. இவ்விடத்தில் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே இவ்விடத்தில் வேகத்தடையோ, பேரிகார்டோ அமைத்தால் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும். இல்லையெனில் இச்சாலையின் நடுவில் வெள்ளை வர்ணம் தீட்டி ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.