நாமக்கல் மாவட்டத்தில் அதிக விபத்து ஏற்படும் சாலையாக சேந்தமங்கலம் சாலை உள்ளது. இந்த சாலையில் அதிக வளைவுகள் காணப்படுகிறது. இதனால் அங்கு அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் சென்டர் மீடியன்கள், வேகத்தடைகள் அமைத்தால் விபத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.