குண்டும், குழியுமான தார் சாலை

Update: 2024-11-10 14:00 GMT

கரூர் மாவட்டம், புஞ்சைதோட்டக்குறிச்சி பேரூராட்சி அருகில் உள்ள அய்யம்பாளையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தட்டுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் மழை பெய்யும் போது இச்சாலையில் ஒரு சில இடங்களில் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்