மதுரை மாவட்டம் சோழவந்தானில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட இரயில்வே மேம்பாலத்தின் மையப் பகுதியில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்ப்பட்டு உள்ளது. இதனால் அப்பாலத்தில் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனால் அப்பாலத்தில் செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விபத்துகளை தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?