சாயர்புரம் அருகே கட்டலாங்குளம் ஊராட்சி போப் காலனியில் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டன. பின்னர் பணிகளை நிறைவேற்றாமல், தோண்டிய குழிகளை மூடி விட்டனர். இதனால் சாலை உருக்குலைந்து கிடக்கிறது. கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.