திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், போசம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீரிக்கல்மேட்டியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தார் சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதையடுத்து சாலைகள் பெயர்க்கப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்டுள்ள தார் சாலை பணியை விரைந்து செயல்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.