பாதசாரிகள் அவதி

Update: 2024-11-10 08:27 GMT

நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் வீரசிவாஜி தெரு உள்ளது. இந்த தெருச்சாலையின் ஒரு பகுதி கழிவுநீர் ஓடையின் மீது சிலாப்புகள் அமைத்து அலங்கார தரைகற்கள் போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஓடையின் மீது அமைக்கப்பட்டு வந்த சிலாப்பு உடைந்து அலங்கார தரைகற்கள் சேதமடைந்து பள்ளம் விழுந்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் ஓடைக்குள் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடை மீது சிலாப்பு அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

-ஆன்டோணி பிரின்ஸ், வைத்தியநாதபுரம்.

மேலும் செய்திகள்