செஞ்சி கடைவீதியில் சாலையை ஆக்கிரமித்து பலர் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.