சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2024-11-03 12:10 GMT

தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா திருவாலம்பொழில் 5-வது வார்டில் சாலையோரத்தில் மழைநீர் வடிகால் இல்லை. மழைக்காலங்களில் மழைநீர் வழிந்தோட வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. சாலையில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்