மதுரை நகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள்,, ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இதில் ஷேர் ஆட்டோக்களின் போக்குவரத்து விதிமுறைகளை மீறி 10-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுவதோடு ஓட்டுனரின் வலதுபுறம் இடதுபுறம் என இரு பயணிகளை அமரவைத்து செல்கின்றனர். மேலும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் நடுரோட்டில் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?