மதுரை அவனியாபுரம் அருகே காவேரி தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது அடிக்கடி மழைபெய்து வருவதால் அப்பகுதி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. அதனால் பொதுமக்கள் அவ்வழியே நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். அப்பகுதியில் தெருவிளக்கும் இல்லை. எனவே அப்பகுதியில் தெருவிளக்கு அமைத்து, சேதமடைந்த சாலையை அகற்றி புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.