விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மகாராஜபுரம் சாலை சேதமடைந்து ஆங்காங்கே பள்ளங்களாக காணப்படுகின்றது. இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழந்த வண்ணம் உள்ளது. இதனால் அவ்வழியே பயணிக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?