விருதுநகர் மாவட்டம் தாதம்பட்டியில் இருந்து ஒண்டிப்புலி நாயக்கனூர் செல்லும் சாலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சேதம் அடைந்து உள்ளது. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்துகளும் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?