கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2024-10-27 12:51 GMT

தூத்துக்குடி புதுக்கோட்டை இந்திராநகர், பி.எஸ்.பி. பள்ளி தெரு, பி.எஸ்.என்.எல். அலுவலக ரோடு ஆகிய பகுதிகளில் புதிய சாலை அமைப்பதற்காக பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டினர். பின்னர் புதிய சாலை அமைக்காமல் பல மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் குண்டும் குழியுமான சாலையில் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே புதிய சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்