புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் இலுப்பூர் தாலுகா, சத்திரம் முதல் எருக்குமணிப்பட்டி- மதுகுப்பட்டி சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அன்றாடம் வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் இச்சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மழை காலங்களில் இந்த சாலை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைத்துத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.