அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வட வீக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த பள்ளத்தில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ள நிலையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.