சேறும், சகதியுமான சாலை

Update: 2024-10-27 11:55 GMT

 திருச்சி மாவட்டம், பூக்கொல்லை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் ஒரு சில இடங்களில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் தற்போது பெய்து வரும் மழைநீர் அந்த பள்ளங்களில் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பெரிய அளவில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் முதியவர்கள், பெண்கள், சிறுவர்- சிறுமிகள் இந்த சாலையில் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்