மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் கருவாழக்கரை வடக்கு வெள்ளாளர் தெருவில் சாலை வசதி இல்லை. மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் முறையான சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.