நாகர்கோவில் கோர்ட்டு ரோடு பகுதியில் டதியம்மாள் தெரு உள்ளது. இந்த தெருவில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை அமைக்கும்போது கழிவுநீர் ஓடையின் மீது சிலாப் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், இரவு அந்த வழியாக செல்லும் இருச்சர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த பள்ளத்தில் சிக்கிக்கொள்கிறது. பாதசாரிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் ஓடையின் மீது சிலாப் அமைக்க வேண்டும்.
-பிரேம், டதியம்மாள் தெரு, நாகர்கோவில்.