நாகர்கோவில் மீனாட்சிபுரம் தோப்பு வணிகர் தெருவில் பாதாள சாக்கடைபணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்து 2 மாதங்கள் ஆகியும் முைறயாக சாலை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், மீனாட்சிபுரம்.