சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் முக்கிய போக்குவரத்து உள்ள பல இடங்களில் வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் இரவில் மின் நிறுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகனத்தில் சென்று வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசவும், ஒளிரும் பட்டைகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.